நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்கிறாரா?- இதோ அதிரடியாக வந்த உண்மை
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் நிறைய நட்சத்திர தம்பதிகள் உள்ளார்கள், அதில் ஒரு ஜோடி தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடித்தான் படத்தின் போது விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவருக்கும் காதல் ஏற்பட சுமார் 6 ஆண்டுகளாக காதலர்களாக இருந்து வந்தனர்.
பின் இவர்கள் இருவரும் 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் படு கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர்.
திருமணம் ஆன சில மாதங்களில் இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். எந்த ஒரு விசேஷ நாள் வந்தாலும் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள்.
வைரல் போட்டோ
இந்த நிலையில் தான் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன் பாலோ செய்துள்ளார், அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா, விவாகரத்து தானா என நிறைய பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் மறுப்பு தெரிவிக்கும் வகையில் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் நெருக்கமாக இசையைக் கேட்கும் வீடியோவை வெளியிட்டார்.
அடுத்து அதிரடியாக என்னய்யா விவாகரத்து செய்தி என நயன்தாரா, தனது கணவர் குழந்தைகளுடன் வெளியூர் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு எல்லா வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வெறும் 74 ரூபாய்க்கு பல ஆயிரம் கோடி நிறுவனத்தை விற்ற தந்தை... அவரது மகனின் தற்போதைய நிலை News Lankasri
