ரசிகர்களின் அமோக வரவேற்பில் மர்மர் திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
மர்மர்
திகில் கதைக்களத்தில் வெளிவரும் தமிழ் திரைப்படங்களுக்கு மக்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். அரண்மனை, காஞ்சனா போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
ஆனால் மாயா, யாவரும் நலம், அவள் போன்ற படங்கள் வழக்கமான கதைக்களத்தில் இல்லாமல் சற்று மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
அப்படி மக்களிடம் இருந்து தற்போது பாராட்டுகளை பெற்று வரும் திரைப்படம்தான் மர்மர். ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 7ம் நீதி வெளிவந்த நிலையில், திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில், இரண்டு நாட்களை கடந்து திரையரங்கில் ஹவுஸ் ஃபுல்லாக போய்க்கொண்டு இருக்கும் மர்மர் திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 1.3 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.