சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் கதை இதுதான்.. இயக்குநர் பகிர்ந்த அதிரடி தகவல்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது, இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். நேற்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது.
அதன்படி, இப்படத்திற்கு மதராஸி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில அதிரடி தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதிரடி தகவல்
அதில், " தற்போது சிவா ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அதனால் மதராஸி திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் படமாக கண்டிப்பாக அமையும்.
இப்படம் வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்து இப்படத்தின் கதைக்களம் இருக்கும். வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களை குறிப்பிடும் வார்த்தை தான் மதராஸி. அதனால் தான் படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
