மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் ரஜினியின் பாட்ஷா திரைப்படம்.. எப்போது தெரியுமா?
ரஜினிகாந்த்
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா. இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்கம் திருவிழா போல் அதிர்ந்தது.
மேலும் பாட்ஷா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் என பலர் நடித்துள்ளனர்.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா படத்தின் ரீ ரிலீஸ் குறித்து சில தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், " பாட்ஷா படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரீ ரிலீஸ் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu
