மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகும் தனுஷின் 50 படத்தின் வில்லன் இவரா?..வெளியான புதிய தகவல்
தனுஷ் 50
தனுஷின் 50 வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
வில்லன் இவரா?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல இசையமைப்பாளர் தேவா, தனுஷ் என்னை அவரது 50 படத்தில் வில்லனாக நடிக்க கூப்பிட்டார். இதை கேட்டதும் ஷாக்காகி விட்டேன்.
அப்போது நான், அவரிடம் என்னை எதற்கு தேர்ந்தெடுத்தீர்களா என்று கேட்டேன். இதற்கு தனுஷ், சார் உங்களுடைய நார்த் மெட்ராஸ் ஸ்லாங் அருமையாக இருக்கும். இந்த படத்திற்கு இது தேவை என்று கூறினார்.
அதற்கு நான், வசனத்தை மறந்துவிடுவேன். ஞாபகம் வைக்க கஷ்டம் என்று சொன்னேன். உடனடியாக தனுஷ், ஓகே சார்.. பிரச்சனை இல்லை விடுங்க என்று கூறியதாக தேவா பேட்டியில் பேசியுள்ளார்.
100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தை உருவாக்கும் சேரன்!..ஹீரோ சூப்பர்ஸ்டாரா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
