சிந்தாமணியின் சூழ்ச்சி.. கையை விட்டு போனதா வீடு! சிறகடிக்க ஆசை சீரியல்
ஏலத்தில் வீடு
பரபரப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ஏலத்திற்கு செல்லவிருக்கும் தங்களது வீட்டை மீட்க முத்து பணத்தை ஏற்பாடு செய்துவிட்டார்.

ரூ. 38 லட்சம் தேவைப்படும் நிலையில், பைனான்ஸ் மூலம் அந்த பணத்தை திரட்டிவிட்டார். முதலில் ரூ. 10 லட்சம் கிடைத்த நிலையில், மீதமுள்ள பணத்தை கையெழுத்து போட்டபின் தருவதாக பைனான்ஷியர் கூறியிருந்தார். இதற்கிடையில் மீனாவிடம் இருக்கும் ரூ. 10 லட்சத்தை திருட சிந்தாமணி சூழ்ச்சி செய்தார்.
சிந்தாமணியின் சூழ்ச்சி
ஆனால், அதனை சாதுர்யமாக கையாண்டு விட்டார் முத்து. பணத்தை திருவிட்டதாக சிந்தாமணியை நம்ப வைத்துவிட்டார். ஆனால், உண்மையில் அந்த பணம் முத்துவிடம் உள்ளது.

இதன்பின், மைனான்ஷியர் தருவதாக சொன்ன பணத்திற்கு முத்து காத்திருக்கும் நிலையில், பணத்தை கொண்டு வந்துகொண்டிருக்கும் அவருடைய ட்ரைவர் போலீசிடம் சிக்கிவிட்டதாகவும், அவரிடம் லைசன்ஸ் இல்லை என்றும் கூறுகிறார். இதனால், அவர் எங்கு இருக்கிறார் என்று சொல்லுங்கள் நானே நேரில் போய் பணத்தை வாங்கி கொள்கிறேன் என முத்து கூறுகிறார்.

இதற்கிடையில், வீட்டை ஏலம் விட ஆரம்பித்துவிட்டனர். சிந்தாமணி ரூ. 52 லட்சத்திற்கு இந்த வீட்டை கேட்கிறார். அதற்கு மேல் யாரும் கேட்காததால் ரூ. 52 லட்சத்திற்கு இந்த வீட்டை ஏலம் விட ரூ. 52 லட்சம் ஒரு தரம், ரூ. 52 லட்சம் இரண்டு தரம் என கூறும்போது எபிசோட் முடிவடைகிறது. ஆனால், அதுவரை முத்து கைக்கு பணம் வந்து சேரவில்லை. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பார்ப்போம்.
மேலாடையின்றி 115 மைல் வேகத்தில் ரேஞ்ச் ரோவரில் பறந்த நபர்: சினிமா பாணியில் சிக்கிய சம்பவம் News Lankasri
கனடாவில் உயர்ந்த சம்பள வேலையை விட்டு, பெற்றோருக்காக நாடு திரும்பும் இந்திய வம்சாவளி பெண் News Lankasri