ஜெயிலுக்கு சென்ற முத்து! குண்டை தூக்கி போட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அதிர்ச்சி
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் குண்டை தூக்கி போட்டுள்ளார் மனோஜ்.
வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருக்கும் காட்சிகள் குறித்து ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் முத்து தனது நண்பன் மற்றும் அவரது மனைவியை தனது வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்துள்ளார்.
அப்போது, கண்டவனுக்காக நான் காத்திருந்து சாப்பிட முடியாது என கூறி, முத்துவின் நண்பன் மற்றும் அவரது மனைவியை அவமானப்படுத்திவிடுகிறார் மனோஜ்.
அதிர்ச்சியடைந்த மீனா
இதனால் கோபமடையும் முத்து, மனோஜிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். இந்த சண்டையில், முத்துவை பார்த்து 'நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தான' என மனோஜ் கூற மீனா அதிர்ச்சியடைகிறார்.
பின், மனோஜ் ஏன் உங்களை பார்த்து அப்படி சொல்லவேண்டும் என முத்துவிடம் மீனா கேட்கிறார். பல நாட்களாக முத்து மறைத்து வரும் இந்த ரகசியம் இறுதியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர துவங்கியுள்ளது.
அந்த உண்மை என்ன என்று விரைவில் ரசிகர்களுக்கு தெரியவரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதோ சிறகடிக்க ஆசை ப்ரோமோ வீடியோ..

வீடு திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன் ஏ.ஆர். அமீன் News Lankasri
