தனது பிறந்தநாளில் அழகான புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி- குவியும் லைக்ஸ்
மைனா நந்தினி
சரவணன்-மீனாட்சி தொடர் செந்தில்-ஸ்ரீஜா, ரச்சிதா, கவின், ரியோ போன்ற நடிகர்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்தது.
அந்த தொடர் மூலம் காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் மைனா நந்தினி. மைனாவாக சரவணன்-மீனாட்சி தொடரில் நடிக்க அந்த பெயரே அவருக்கான ஒரு அடையாளமாக அமைந்துவிட்டது.
தொடர்ந்து மைனா நந்தினி விஜய் டிவியை தாண்டி ஜீ தமிழ் என தொடர்கள் நடித்து வந்தார். தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களை தாண்டி இப்போது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் மைனா நந்தினி.
சிவகார்த்திகேயனிடம் பல முறை அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டேன், ஆனால்- மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி
பிறந்தநாள்
இன்று மைனா நந்தினியின் பிறந்தநாள், காலை முதல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
மைனாவின் கணவர் யோகேஷ்வரனும் அவருக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மைனா நந்தினி தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.