பம்மாத்து படங்களுக்கு நடுவே இப்படி ஒரு படமா: சீனு ராமசாமியை பாராட்டிய மிஷ்கின்
சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் மாமனிதன் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நேற்று இயக்குனர் பாரதிராஜா கண்ணீருடன் சீனு ராமசாமியை பாராட்டி இருந்தார். இந்நிலையில் இன்று மிஷ்கின் மாமனிதன் பற்றி பேசி இருக்கிறார்.
அவர் கூறி இருப்பதாவது..
சீனு ராமசாமிக்கு எனது நன்றிகள்! எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் சூறாவளி அவ்வப்போது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு முழு மனிதனாக்குகிறது. அவன் மாமனிதன் ஆகிறான்.
மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்தப்பட என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது.
மசாலா படங்களுக்கும் பம்மாத்து படங்களுக்கும் நடுவே ஒரு மென்மையான படத்தை தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்.
இவ்வாறு மிஷ்கின் குறிப்பிட்டு இருக்கிறார்.
#mamanithan @seenuramasamy #vijaysethupathy @VijaySethuOffl @SGayathrie pic.twitter.com/eO34u6HLmJ
— Mysskin (@DirectorMysskin) June 26, 2022

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
