இதுக்கு அவ்ளோ விமர்சனமா.. லியோ வெற்றி விழா பற்றி மிஷ்கின் கோபமான பேட்டி
நடிகர் விஜய்யின் லியோ பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு விஜய்யை லெஜெண்ட் என கூறி இருந்தார்.
"ப்ரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜெண்ட்கள் பற்றி பிடித்து இருக்கிறேன். நான் நேரில் பார்த்த லெஜெண்ட் விஜய் தான்" என மிஷ்கின் கூறி இருக்கிறார்.
மனசில் இருந்து செய்தேன்..
மேடையில் மிஷ்கின் தலைவணங்கி விஜய் கைக்கு முத்தம் கொடுத்தது வைரல் ஆனது. அது பற்றி ஒரு சில விமர்சித்தனர். அது பற்றி தற்போது செய்தியாளர்கள் மிஷ்கினிடம் கேட்டபோது அவர் கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.
'விஜய் ஒரு லெஜெண்ட். என்னை எல்லாரும் பணிவில்லாதவன் என்று தான் சொல்வார்கள். அவருக்கு பணித்து முத்தம் கொடுத்ததற்கு இவ்ளோ விமர்சனமா. நான் அறிவில் இருந்து பண்ணல, மனசில் இருந்து செய்தேன். நான் அறிவில் இருந்து பண்ணது சினிமா மட்டும் தான். ஆனால் மற்றவர்கள் உடன் பழகும்போது மனசில் இருந்து தான் பழகுவேன்.'
"என் கெரியர் தொடங்கியது யூத் படத்தில் தான். என்னை குழந்தை போல தம்பி பார்த்துக்கொண்டார். அவர் மகாகலைஞன். நல்ல மனிதன்" என மிஷ்கின் கூறி இருக்கிறார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
