சூப்பர் சிங்கரில் கடும் கோபத்துடன் பேசிய மிஷ்கின்.. காரணம் என்ன
சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி 11 சீசன்களை கடந்து நடைபெற்று வருகிறது.
இதில் ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகள் உள்ளன. இதில் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 தற்போது நடைபெற்று வருகிறது. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், மிஷ்கின் மற்றும் தமன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
இவர்கள் நால்வருக்கும் தனித்தனி டீம் உள்ளது. இதில் ஒரு டீமில் ஐந்து போட்டியாளர்கள் என 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. சூப்பர் சிங்கரில் மிஷ்கின் பேசுவது, அவர் செய்யும் கலாட்டா எல்லாம் இணையத்தில் வைரலானது.
கடும் கோபத்துடன் பேசிய மிஷ்கின்
இந்த நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் சரண் ராஜா மற்றும் திசாத்தானா ஆகிய இரு போட்டியாளர்கள் சரியாக பாடவில்லை என கடும் கோபத்துடன் பேசியுள்ளார். அவருடைய டீமை சேர்ந்த சரண் ராஜாவை இன்னும் கடுமையான விமர்சித்தார்.