அதை நான் பார்க்க கூட இல்லை.. ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி பற்றிய உண்மையை போட்டுடைத்த மிஷ்கின்
ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகளை நீக்கியது பற்றி மிஸ்கின் பேசி இருக்கிறார்.
மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் அடுத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். அதில் ஆண்ட்ரியா தான் மெயின் ரோலில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடித்து இருப்பதாகவும், ஆனால் அதை மிஷ்கின் பின்னர் நீக்கிவிட்டார் என்றும் செய்திகள் வந்தது. அதை அவரும் ஒப்புக்கொண்டார்.
அதை நான் பார்க்க கூட இல்லை
நிர்வாண போட்டோஷூட் எடுத்து உண்மைதான். அதை எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பர் போட்டோகிராபர் சுந்தர் என்பவரை வைத்து எடுத்தோம். ஆனால் படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும், இந்த காட்சியை வைத்தால் ஏ சர்டிபிகேட் தான் கொடுப்பார்கள் என பேசி அந்த காட்சி வைக்க வேண்டாம் என முடிவெடுத்தோம்.
'அந்த போட்டோக்களை நான் பார்க்க கூட இல்லை, அதை எல்லாம் நீக்கிவிடும்படி போட்டோகிராபரிடம் சொல்லிவிட்டேன்' என மிஷ்கின் கூறி இருக்கிறார்.