6000 கோடி போட்டு படம் எடுக்கும் பிரபல நிறுவனம்! அதிர வைக்கும் தகவல்
தமிழ் சினிமாவை விட தற்போது தெலுங்கு சினிமா துறை தான் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பான் இந்தியா ஹிட் படங்களாக கொடுத்து வருவது ஒருபக்கம் என்றால், RRR படத்திற்கு இரண்டு ஆஸ்கார் கிடைத்ததும் தெலுங்கு சினிமா தற்போது உச்சத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
6000 கோடி
இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குனர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அதில் அந்த நிறுவனம் தற்போது மொத்தம் 6000 கோடி முதலீட்டில் படங்கள் எடுத்து வருவது தெரிய வந்திருக்கிறது.
புஷ்பா 2 படம் உட்பட மொத்தம் 19 படங்களை தற்போது அவர்கள் தயாரித்து வருகிறார்களாம். தமிழ் இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் கூட ஒரு படத்தை அந்த தயாரிப்பு நிறுவனத்திற்காக இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் மட்டுமின்றி வெற்றிமாறனும் ஒரு படத்திற்காக பேச்சு வார்த்தையில் இருந்து வருகிறாராம்.
கில்லி விஜய்யின் தங்கை.. 33 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது பற்றி அதிரடி

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
