ஜூனியர் NTR-ன் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ
ஜூனியர் NTR
தெலுங்கு சினிமாவில் மூலம் அறிமுகமாகி இன்று Pan இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் ஜூனியர் NTR. இவர் Ninnu Choodalani திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவான Student No: 1 திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். சிம்ஹாத்ரி, பிருந்தாவனம், டெம்பர், RRR என பல ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தேவரா படமும் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக இவர் நடிப்பில் வார் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது. பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே போல் பிரஷாந்த் நீல் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
ஜூனியர் NTR-ன் மனைவி
கடந்த 2011ம் ஆண்டு லட்சுமி பிராணதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ஜூனியர் NTR தனது மனைவியின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

