நானே வருவேன் படத்தின் முதல் சென்சார் ரிவ்யூ! படம் எப்படி இருக்கிறது தெரியுமா?

By Jeeva Sep 26, 2022 02:00 PM GMT
Report

நானே வருவேன்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் நானே வருவேன்.

தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. அப்படத்தை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் இப்படம் வெளியாகும் அடுத்த நாளே பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதனால் நானே வருவேன் படத்திற்கு முன்பதிவில் வரவேற்பு கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது.

நானே வருவேன் படத்தின் முதல் சென்சார் ரிவ்யூ! படம் எப்படி இருக்கிறது தெரியுமா? | Naane Varuven First Review

ரிவ்யூ

இதற்கிடையே தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் முதல் ரிவ்யூ குறித்த புகைப்படம் பரவி வருகிறது. அதில் நானே வருவேன் திரைப்படம் இந்தாண்டின் சிறந்த தில்லர் படத்தில் ஒன்று, தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், விருது நிச்சயம் என ஸ்டார்ஸ் உடன் ரிவ்யூ ஒருவர் போட்டுள்ளார்.

ஏற்கனவே இதே நபர் பல சுமாரான திரைப்படங்களுக்கு இதே போல் புகழ்ந்து ரிவ்யூ கொடுத்திருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

நானே வருவேன் படத்தின் முதல் சென்சார் ரிவ்யூ! படம் எப்படி இருக்கிறது தெரியுமா? | Naane Varuven First Review

நடிகை சினேகாவின் மகளா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US