நானே வருவேன் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு ! பொன்னியின் செல்வனுக்கு போட்டி
நானே வருவேன்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் நானே வருவேன்.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு அரம்பத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதிகாரபூர்வ அறிவிப்பு
மேலும் தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ஆம், நானே வருவேன் வரும் 29 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
நானே வருவேன் வெளியான அடுத்த நாளே பொன்னியின் செல்வன் வெளியாக இருக்கிறது. எனவே எந்த திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா