நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவாரா பாக்யராஜ்? விஷால் தரப்பு அனுப்பிய நோட்டீஸ்
நடிகர் பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
நடிகர் சங்கம்
நடிகர் சங்கத்தில் தற்போது நாசர் - விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தான் தலைமை பொறுப்பில் இருக்கிறது. 2019ல் நடந்த தேர்தலில் விஷால் தரப்பை எதிர்த்து பாக்கியராஜ் - ஐசரி கணேஷ் டீம் தான் மோதியது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் ஸ்டே விதித்ததால் மிக தாமதமாக கடந்த மார்ச் 20ம் தேதி தான் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதில் விஷால் அணி ஜெயித்து பதவிக்கு வந்தது.
பாக்யராஜுக்கு நோட்டீஸ்
நடிகர் பாக்கியராஜ் நேற்று தான் அதிமுகவில் இணைவதாக அறிவித்தார். அவர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து கட்சியில் இணைந்துகொண்டார். இந்த நிலையில் நடிகர் சங்கம் அவரை ஏன் சங்கத்தில் இருந்து நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் மீது பொய்யான, காழ்ப்புணர்ச்சியுடன் அவர்களது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினர்கள் பலரும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
அதனால் உங்களை ஏன் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது என இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர்.
38 வயதாகியும் திருமணம் செய்யாத நடிகை சதா! கல்யாணத்திற்கு போடும் கண்டிஷன்கள்