100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. First லுக் போஸ்டர் இதோ

By Kathick Jan 13, 2025 09:00 AM GMT
Report

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ - லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா அற்புதமான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். சுருள் முடி- தாடி- நேர்த்தியான உடல் அமைப்பு- சட்டை இல்லாத தோற்றம் - ரத்தக் களரி என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த போஸ்டரில் அவருடைய சிக்ஸ் பேக் உடல் அமைப்பும் இடம் பிடித்திருக்கிறது. அவரின் இந்த துணிச்சலான அவதாரத்தில், கடலில் அச்சுறுத்தும் முதலையுடன் அச்சமின்றி போராடுவதையும் சித்தரிக்கிறது. அதே தருணத்தில் கைகள் மற்றும் கயிறு மூலம் அந்த உயிரினத்தின் வாயைத் திறந்து வைத்திருக்கும் ருத்ராவின் துணிச்சல் மற்றும் வலிமையும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது.

நாக பந்தம் சாகசம் கலந்த காவிய படமாக உருவாகி வருகிறது. இதன் டேக் லைன் 'தி சீக்ரெட் ட்ரெஷர் '. இது பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் பயணத்தை குறிப்பதாக இருக்கிறது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அபிஷேக் நாமா எழுதி இருக்கிறார். இதனை NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபு ரெட்டி , அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் இணைந்து பெருமையுடன் வழங்குகிறார்கள்.

நாக பந்தம் என்பது ஆன்மீக மாயவாதத்தையும், சிலிர்ப்பூட்டும் சாகசத்தையும் இணைக்கும் ஒரு இந்திய காவியமாகும். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோயில்களின் மறைக்கப்பட்ட ரகசியத்தை இந்த திரைப்படம் ஆய்வு செய்கிறது. குறிப்பாக நாக பந்தத்தின் புனித நடைமுறையை மையமாகக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாத் போன்ற ஆலயங்களில் சமீபத்திய புதையல் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தெய்வீக இடங்களை சுற்றியுள்ள வசீகரிக்கும் வகையிலான புராணங்களின் அடிப்படையிலும் .. அவற்றை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிரான சடங்குகளையும் பிரதிபலிக்கிறது. இந்த திரைப்படம் ஒரு பழமையான மர்மங்களை புதிய நவீன கதையம்சத்துடன் உயிர்ப்பிக்கிறது.

எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை கல்யாண் சக்கரவர்த்தி எழுத, ஆர். சி. பனவ் படத்தொகுப்பு பணிகளை கையாள்கிறார். அசோக் குமார் கலை இயக்குநராக பங்களிப்பு செய்கிறார்.

நாக பந்தம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, இந்த ஆண்டில் வெளியாகும்.

நடிகர்கள் : விராட் கர்ணா , நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா , பி. எஸ். அவினாஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

தயாரிப்பு நிறுவனம் : NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ்

வழங்குநர் : லட்சுமி இரா & தேவன்ஷ் நாமா

கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா

தயாரிப்பாளர் : கிஷோர் அன்னபு ரெட்டி

ஒளிப்பதிவு : எஸ். சௌந்தர்ராஜன்

இசை : அபே

வசனம் : கல்யாண் சக்கரவர்த்தி

படத்தொகுப்பு : ஆர் சி பனவ்

சண்டை பயிற்சி : வெங்கட் & விளாட் ரிம்பர்க்

ஆடை வடிவமைப்பாளர் : அஸ்வின் ராஜேஷ்

தலைமை நிர்வாக அதிகாரி : வாசு பொதினி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : அசோக் குமார்

நிர்வாக தயாரிப்பாளர் : அபிநேத்ரி ஜக்கல்

ஸ்கிரிப்ட் டெவலப்மென்ட் : ஷ்ரா 1- ராஜீவ் என். கிருஷ்ணா

VFX - தண்டர் ஸ்டுடியோஸ்

VFX சூப்பர்வைசர் : தேவ் பாபு காந்தி ( புஜ்ஜி )

விளம்பர வடிவமைப்பு : கானி ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US