2 மாதங்கள் தான்.. திருமண வாழ்க்கை குறித்து நாகசைதன்யா உடைத்த ரகசியம்
நாகசைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நடிகர் நாகசைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.
இதன்பின் நடிகை சோபிதாவை காதலித்து, கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது, நாகசைதன்யா நடிப்பில் தண்டல் திரைப்படம் வருகிற 7ஆம் தேதி வெளிவரவுள்ளது.
உடைத்த ரகசியம்
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தன் மனைவி சோபிதா குறித்து அவர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " என் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் அதை முழுமையாக அனுபவித்து வருகிறேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டு 2 மாதங்கள் தான் ஆகிறது.
இருப்பினும் சினிமாவையும், வாழ்க்கையையும் சமமாக கொண்டு சென்று வருகிறோம். நாங்கள் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். ஆனால், ஒரே நகரங்களை சேர்ந்தவர்கள் அல்ல அவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இருப்பினும் கலாச்சார ரீதியாக எங்கள் இடையே நிறைய தொடர்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.