ரசிகர் கொடுத்த அட்வைஸ்.. சூர்யா என்ன செய்துள்ளார் பாருங்க
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து, சூர்யா கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தனது 2 பெண் குழந்தைகளை முதன்முறையாக கையில் வாங்கிய தருணம்.. பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ
அதை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா இணைய உள்ளார்.
என்ன செய்துள்ளார் தெரியுமா
இந்நிலையில் சூர்யா பேட்டி ஒன்றில் தன் ரசிகர் ஒருவர் கூறிய அட்வைஸ் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் எப்போதும் என் பேன்ட்டை இடுப்புக்கு மேல் தான் போடுவேன். ஆனால், நான் சிங்கப்பூரில் இருக்கும்போது அங்கு உள்ள ரசிகர் ஒருவர் என்னிடம் பேண்டை நீங்கள் லோ ஹிப்பில் போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அன்று முதல் நான் அதை ஃபாலோ செய்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.