சோபிதாவிடம் அப்படி பேச சொல்வேன், அதுதான் வசதி..நாக சைதன்யா போட்டுடைத்த ரகசியம்
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நடிகை சமந்தா உடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் காதலில் இருந்து, பின் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
ரகசியம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய நாக சைதன்யா " சினிமா துறையில் தினமும் வெவ்வேறு மொழிகளை சேர்ந்த பல மக்களை நான் சந்திக்கிறேன்.
இருப்பினும் நான் மற்ற மொழிகளில் பேசும் நபர்களை விட தெலுங்கு பேசும் நபர்களிடம் சீக்கிரமாகவே நெருங்கி பழக தொடங்கிடுவேன்.
அதனால் என்னிடம் வந்து பேசும் அனைவரையும் தெலுங்கில் பேச சொல்கிறேன். என் மனைவி சோபிதா துலிபாலாவிடம் கூட என்னிடம் தெலுங்கில் பேச சொல்லியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.