திருமணத்திற்கு பின் முதல் விசேஷம்.. நாக சைதன்யா - சோபிதா எங்கு சென்றுள்ளனர் பாருங்க
நாக சைதன்யா - சோபிதா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
நடிகை சமந்தா உடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதாவுடன் காதலில் இருந்து, பின் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையோடு, நாக சைதன்யா - சோபிதா தம்பதி, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
முதல் விசேஷம்
இந்நிலையில், பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் மகளான ஆலியா காஷ்யப் - ஷேன் கிரிகோயர் திருமண நிகழ்ச்சியில் நாக சைதன்யா - சோபிதா ஜோடி ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் திருமணம் முடிந்து ஒன்றாக பங்குபெறும் முதல் நிகழ்ச்சி இது என்பதால் அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.