நான் நிறைய பேருக்கு முத்தம் கொடுத்திருக்கேன்!.. நாக சைதன்யா பேட்டி
நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இதில் அரவிந்த்சாமி, பிரியா மணி, சரத்குமார், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'கஸ்டடி' படத்தின் ட்ரைலர் வெளியாகி சோசியல் மீடியா பக்கங்களில் வைரலானது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் தொகுப்பாளர் நாக சைதன்யாவிடம் நீங்கள் இது வரை இத்தனை பேருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், நான் திரைப்படங்களில் நடிக்கும் பல பேருக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன் . நான் இதையெல்லாம் கணக்கு வைப்பதில்லை என்று கூறியுள்ளார்.
நாக சைத்னயா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
நடிகர் மம்மூட்டியின் மனைவி எவ்ளோ அழகு பாருங்க.. இதோ புகைப்படம்