மறுமணம் செய்யப்போகும் நடிகர் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா, தெலுங்கில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஷ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஆனால், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் Ye Maaya Chesave தான். தமிழில் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன, Ye Maaya Chesave படத்தை தொடர்ந்து 100% லவ், மஜிலி, மனம் என பல படங்களில் நடித்தார்.
இன்று தெலுங்கு திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
மேலும் தற்போது தனது மருமணத்திற்கு தயாராகியுள்ளார் நாக சைதன்யா. நடிகை சோபிதாவுடன் நாக சைதன்யாவிற்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இன்று நாக சைதன்யாவின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 150 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
