நடிகர் நாக சைதன்யா இத்தனை கோடிக்கு சொந்தக்காரா.. பிரமிக்கவைக்கும் சொத்து மதிப்பு விவரம்!!
நாக சைதன்யா
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் நாக சைதன்யா.
கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக தடம் பதித்தார். அப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடிக்கும் போது நடிகை சமந்தாவை காதலித்து வந்தார்.
இந்த காதல் ஜோடி கடந்த 2017-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தது. ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
சொத்து மதிப்பு
சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா, ஒரு படத்திற்கு ரூபாய் 12 கோடி சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்போது இவர் ரூ.154 கோடி சொத்துக்கு அதிபதியாக இருக்கிறாராம். கார்கள் மீது அதிகம் பிரியம் கொண்ட இவர், சமீபத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 911 ஜிடி3 காரை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
