எனக்கு இது போதும்.. சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பற்றி நாகார்ஜூனா கருத்து
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பற்றி நடிகர் நாகார்ஜூனா பேட்டி அளித்து இருக்கிறார்.
விவாகரத்து
சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் பல வருட காதலுக்கு பிறகு குடும்பத்தினர் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொண்டனர் என்றாலும் அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த வருடம் அவர்கள் விவாகரத்தை அறிவித்தபோது ஒட்டுமொத்த ரசிகர்களும் கடும் அதிர்ச்சி ஆனார்கள்.
சமந்தா கெரியரில் பிசியாகி பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் விவாகரத்து பற்றி நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜூனா கருத்து கூறி இருக்கிறார்.
எனக்கு இது போதும்..
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நாகார்ஜுனாவிடம் நாக சைதன்யா விவாகரத்து பற்றி கேட்கப்பட்டது.
"நாக சைதன்யா மகிழ்ச்சியாக இருக்கிறார். அதை மட்டும் தான் பார்க்கிறேன். எனக்கு அது மட்டும் போதும். இது அவனுக்கு கிடைத்த அனுபவம். துரதிஷ்டவசமானது தான்."
"அவர்கள் உறவு முடிந்துவிட்டது. அதை பற்றியே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அது முடிந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் இருந்து முடிந்துவிட்டது. விரைவில் எல்லோர் வாழ்க்கையில் இருந்து வெளியில் சென்றுவிடும்" என நாகார்ஜுனா கூறி இருக்கிறார்.
ரஜினிகாந்த் படத்தை நிராகரித்த பிரியங்கா மோகன்.. காரணம் இந்த கிசுகிசு தானாம்

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
