வினுஷா உடல் அமைப்பை கொச்சையாக பேசிய நிக்சன்..கமல் கேட்காததை தட்டி கேட்ட நடிகர் நாகர்ஜுனா
பிக் பாஸ்
பிக் பாஸ் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக தான் இருந்து வருகிறது. இந்த விஷயத்தால் தான் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 7ல் நிக்சன் வினுஷா உடல் அமைப்பை பற்றி தவறாக பேசினார். ஆனால் இந்த விஷயம் குறித்து கமல் ஹாசன் எதுவும் சொல்லவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

நாகர்ஜுனா
இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸில் ஒரு ஆண் போட்டியாளர் பெண் போட்டியாளரின் உடல் அமைப்பை கை செய்கை மூலம் கிண்டல் செய்துள்ளார்.
நடிகர் நாகார்ஜுனா சம்பந்தப்பட்ட அந்த ஆண் போட்டியாளர்களை கடுமையாக கண்டித்து மேலும் அந்த பெண் போட்டியாளரிடம், ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
தற்போது அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, கமலும் நாகார்ஜுனா போன்று கேள்வி கேட்டு இருக்க வேண்டும் என்று பதிவிட்டு உள்ளனர்.
