வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா?
கூலி படம்
தமிழ் சினிமா மிகவும் எதிர்ப்பார்த்த நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் வெளியாகிவிட்டது.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினி, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், நாகர்ஜுனா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நடிகர் ரஜினியின் 172வது படமாக தயாராகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளார்கள்.
ரஜினியின் நண்பர் சத்யராஜ் மாரடைப்பால் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணம் இயக்கையானது இல்லை, யாரோ நெஞ்சில் ஓங்கி அடித்ததால் நடந்தது என தெரிய வருகிறது.
யார் அந்த கொலையாளி என ரஜினி கண்டுபிடிக்க சத்யராஜ் மகள்களுக்கு வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார், இதுவே படத்தின் கதை.
சம்பள விவரம்
நாம் படம் ரிலீஸ் ஆன நாள் முதல் கூலி படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பள விவரத்தை பதிவிட்டு வருகிறோம்.
தற்போது நடிகர் நாகர்ஜுனாவின் சம்பள விவரம் தான் வெளியாகியுள்ளது. நாகர்ஜுனா கூலி படத்திற்காக ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.