ராஜா ராணி படத்தையே மிஞ்சிடும் விஜய் டிவி சீரியல்! ப்ரோமோ வீடியோ
ராஜா ராணி படத்தில் வரும் ஏர்போர்ட் சீன், மியூசிக் விஜய் டிவி தொடர் ஒன்றில் வந்திருக்கும் காட்சி வைரல் ஆகி வருகிறது.
சீரியல்கள்
தற்போது எல்லாம் சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் திரைப்படங்களை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு கதைகளை கொண்டிருக்கின்றன. சில படங்களின் கதைகளை சீரியல்கள் உடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் அளவுக்கு தான் நிலைமை இருக்கிறது.
முன்பு போல இல்லாமல் தற்போது சின்னத்திரை தொடர்களும் அதிகம் பட்ஜெட் ஒதுக்கி எடுக்கிறார்கள். மேலும் சீரியல்களில் திரைப்படங்களின் சீனை காப்பி அடித்து அதே மியூசிக் போட்டு ரசிகர்களை கவர்வதும் பல சமயம் நடக்கிறது.
ராஜா ராணி ஏர்போர்ட் சீன் காப்பி
தற்போது விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் ராஜா ராணி படத்தில் வரும் கிளைமாக்ஸ் ஏர்போர்ட் சீனை காப்பி அடித்து காட்சி வைத்திருக்கின்றனர். அதிலும் அதே படத்தின் மியூசிக் தான் பயன்படுத்தி இருக்கின்றனர்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வைரல் ஆகி வருகிறது. அதை சிலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் அந்த காட்சியை ஷாப்பிங் மாலில் படமாக்கிவிட்டு ஏர்போர்ட் போல காட்டி இருப்பதையும் பலர் விமர்சித்து இருக்கின்றனர்.
சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? இளமை வயது போட்டோ இதோ