மக்கள் கொண்டாடிய நடிகர் நானியின் ’ஜெர்சி’ படத்தை மிஸ் பண்ண நடிகை.. யார்?
நானி
தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. Ashta Chamma என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகர் நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். ’ஜெர்சி’ திரைப்படம் நானியின் கெரியரில் சிறந்த படங்களில் ஒன்றாகும்.

யார்?
2019 இல் வெளிவந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். ஆனால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப் படத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்தப் படத்திற்கு முதலில் ரெபா மோனிகா ஜான்தான் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் அப்போது அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வந்ததால், இந்தப் படத்தை மறுத்திருக்கிறார். பின்னர், அவருக்குப் பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.
