போதும் சார் போதும்.. நடிகர் நானி குறித்து பேசிய கமல்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு
கமல் - நானி
நடிகர் கமல் ஹாசனை முன்னோடியாக வைத்து சினிமாவில் களம்புகுந்தவர்கள் பலர் உள்ளனர். லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யா, கவுதம் மேனன், மணிகண்டன் என பலரையும் கூறலாம்.
அப்படி கமல் ஹாசனின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் நானி. தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஹிட் 3 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
கமல் ஹாசன் குறித்து பல்வேறு இடங்களில் நடிகர் நானி பேசியுள்ளார். அப்படி ஒரு முறை பேட்டி ஒன்றில், விருமாண்டி திரைப்படத்தில் நீதிமன்றம் காட்சியில் கமல் ஹாசன் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நடிப்பு தன்னை வியக்க வைக்கிறது என நானி பேசியிருந்தார். அது மிகவும் வைரலானது.
நானி குறித்து பேசிய கமல்
இந்நிலையில், கமல் ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில், தனது நடிப்பு குறித்து நானி குறிப்பிட்டு கூறியதை பற்றி பேசியுள்ளார். இதில் "நான் நானி பெயரை குறிப்பிட்டதற்கு காரணம், அப்படிதான் சினிமா இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நானி என சொன்னதே போதும் அவருக்கு. அதுபோல் தான் நடிப்பும் இருக்க வேண்டும்" என பேசியிருந்தார்.
கமல் ஹாசன் தன்னை குறிப்பிட்டு பேசிய நிலையில், அதற்கு நானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் 'போதும் சார் போதும்' என ஹார்டிங் சிம்பிளுடன் தனது மகிழ்ச்சியை நானி வெளிப்படுத்தியுள்ளார்.
Podhum sir. Podhum ♥️@ikamalhaasan
— Nani (@NameisNani) May 28, 2025

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
