மறைந்த நடிகர் ரோபோ ஷங்கர் வாழ்க்கையில் இந்த கஷ்டமா?.. பிரபலம் கூறிய விஷயம்
ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கர், கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா ரசிகர்களை கலங்க வைத்த ஒரு பிரபலம். இத்தனை வருடங்களாக சினிமாவில் நுழைந்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் இன்று தனது குடும்பத்தினரை அழ வைத்துவிட்டு மொத்தமாக சென்றுவிட்டார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் சிகிச்சைக்கு பின் உடல் நிலை சரியாகி மீண்டும் நடிக்க வந்தார். நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, புதிய படங்கள் கமிட்டாவது என பிஸியாக இருந்தார்.
ஆனால் இடையில் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
கஷ்டம்
ரோபோ ஷங்கர் அவர்களின் மறைவிற்கு பிறகு பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து வந்தார்கள்.
அப்படி விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் பேசும்போது, ரோபோ ஷங்கருக்கு கடந்த 2 வருடங்களாக நிரந்தர வேலை இல்லை, அவர் வீட்டுக்கு ஒரு லட்சம் மாதம் EMI கட்ட வேண்டும்.
வாய்ப்பு இல்லை என்றால் அவர் என்ன செய்வார், ஓடி ஓடி உழைத்தார், அவரால் பிரபலமான தொலைக்காட்சி கூட வாய்ப்பு தரவில்லை. அவரின் மகள் இந்திரஜா வருமானம் இல்லாததால் தான் பல புரொமோஷன் செய்து வருகிறார் என கூறியுள்ளார்.