அன்று குழந்தை நட்சத்திரம் இன்று தேசிய விருது வெற்றியாளர்.. யார் தெரியுமா
தேசிய விருது
டெல்லியில் இடம் பெற்றுள்ள விக்யான் பவனில் நேற்று 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பொன்னியின் செல்வன்
அஞ்சலி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி.
இவருக்கு நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக விருது பெற்றுள்ளனர்.
விருது பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து ஆனந்த் பேசியுள்ளார். அதில், "பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக 4 விருதுகள் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது திறமைக்கு கிடைத்த பரிசு" என்று கூறியுள்ளார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
