நட்டி நட்ராஜின் "குருமூர்த்தி" படம் எப்படி இருக்கு?

By Parthiban.A Dec 13, 2022 07:40 AM GMT
Report

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

நட்டி நட்ராஜின் "குருமூர்த்தி" படம் எப்படி இருக்கு? | Natty Natraj Gurumoorthy Movie Review

சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்.

குருமூர்த்தி படம் கடந்த டிசம்பர் 9ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தில் தொழிலதிபரான ராம்கியிடம் இருக்கும் 5 கோடி ருபாய் கருப்பு பணத்தை யாரோ கொள்ளை அடித்துவிடுகிறார்கள். அதை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கும் போலீஸ் அதிகாரி தான் நட்டி.

நட்டி நட்ராஜின் "குருமூர்த்தி" படம் எப்படி இருக்கு? | Natty Natraj Gurumoorthy Movie Review

வழக்கமாக எல்லா படங்களிலும் ஹீரோ வில்லன் சண்டை தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த பண பெட்டி எங்கெல்லாம் செல்கிறது, அதை போலீஸ் கண்டுபிடித்ததா இல்லையா என்பது தான் மொத்த படமும்.  

இந்த படம் போரடிக்காமல் மக்களை எண்டர்டெயின் செய்யும் அளவுக்கு சிறப்பாகவே இருக்கிறது என விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.

Also read: உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டாக மாறிய விஜய் சேதுபதி.. அசந்துபோன ரசிகர்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US