மனைவியை வீட்டுக்குள் விடாமல் கேட்டை பூட்டிய ரஜினி பட நடிகர்? வெடித்த சர்ச்சை
நவாஸுதீன் சித்திக்
நடிகர் நவாஸுதீன் சித்திக் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் தான் அவர். அதற்கு காரணம் அவரை பிரிந்த மனைவி ஆலியா நவாஸுதீன் கொடுத்து வரும் புகார்கள் தான்.
நவாஸுதீன் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார், டிஎன்ஏ டெஸ்ட் செய்ய சொல்கிறார் என அடுக்கடுக்கான புகார்களை ஆலியா கூறி இருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆலியா நவாஸுதீனின் பங்களாவுக்கு குழந்தைகள் உடன் செல்ல முற்பட்ட போது தடுதது நிறுத்தப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டார். அப்போது அதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக ஆலியா வெளியிட்டு இருக்கிறார்.
"என் கையில் 81 ருபாய் மட்டுமே இருக்கிறது, குழந்தைகள் அழுதுகொண்டிருகிறார்கள். நான் அங்கே போவேன். எனக்கு வேறு இடம் எதுவும் இல்லை" என அவர் கூறி இருந்தார்.
எல்லாம் பொய்.. நவாஸுதீன் விளக்கம்
இது பற்றி நவாஸுதீன் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது. அந்த பங்களா நவாஸுதீநின் அம்மா பெயரில் இருக்கிறது. அவர் தான் அந்த வீட்டில் இருக்கிறார், அந்த வீட்டுக்குள் யார் வர வேண்டும் என்கிற முடிவில் அவர் தான் எடுக்கிறார். தன் பேர குழந்தைகளை மட்டும் அவர் அனுமதிக்க தயாராக இருக்கிறார். அந்த வீடியோவில் யாரும் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை.
ஆலியாவுக்கு வேறு வீடே இல்லை என்பது சுத்த பொய், அவருக்கு 2016ல் நவாஸுதீன் ஒரு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கி கொடுத்தார். அதை ஆலியா வாடகைக்கு விட்டிருக்கிறார். தற்போது தனக்கு வீடே இல்லை என நாடகம் போடுகிறார் என கூறி இருக்கின்றனர்.
எனக்கு இவர் தான் ரியல் ஹீரோ.. அனிகா சுரேந்திரனின் ஓபன் பதில்