மனைவிக்கு மாதம் ரூ.10 லட்சம் கொடுக்கிறேன்.. ஆனாலும் பணம் பறிக்க பார்க்கிறார்: பிரபல நடிகர் குற்றச்சாட்டு
சர்ச்சை
ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் தான் நவாஸுதீன் சித்திக். ஹிந்தி சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்து வரும் அவர் மீது முன்னாள் மனைவி ஆலியா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
தன்னை நவாசுதீனின் பங்களாவுக்குள் விடவில்லை, குழந்தைகள் ரோட்டில் நின்று அழுகிறார்கள் என ஆலியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி சர்ச்சை ஏற்படுத்தியது.
நவாஸுதீன் சித்திக் அறிக்கை
இந்நிலையில் நவாஸுதீன் சித்திக் கடந்த ஒருவாரமாக வாய்திறக்காமல் இருந்த நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
"நான் ஆலியாவிடம் இருந்து ஏற்கனவே விவாகரத்து பெற்றுவிட்டேன். குழந்தைகளுக்காக நான் துபாயில் வீடு வாங்கி கொடுத்தேன். அங்கு அனைத்து செலவுகளும் போக ஒரு மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் கொடுத்து வருகிறேன்."
"கடந்த 45 நாட்களாக குழந்தைகள் துபாயில் இருக்கும் பள்ளிக்கு செல்லவில்லை. குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பகடைக்காயாக வைத்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார். என் மீது எதாவது ஒரு புகார் கொடுப்பதும், அவர் கேட்கும் பணத்தை கொடுத்தால் உடனே அதை வாபஸ் பெறுவதும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார் ஆலியா."
"நான் சம்பாதிப்பது எல்லாமே என் குழந்தைகளுக்கு மட்டும் தான்" என நவாஸுதீன் சித்திக் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா 2ல் முக்கிய நடிகை மாற்றம்! ஒரே மாதத்திற்குள் இப்படியா