யாருடன் பழக வேண்டும் என்பது முக்கிய.. நடிகை நயன்தாரா அட்வைஸ்
நயன்தாரா அட்வைஸ்
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா சமீபத்தில் பிரபல கல்லூரிக்கு விருந்தினராக சென்றிருந்தார்.

அப்போது மேடையில் பேசிய நயன்தாரா மாணவர்களின் எதிர்காலத்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்தார்.
இது முக்கியம்
அதில் 'கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானது, மகிழ்ச்சி நிறைந்தது. இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்கானது. இந்த சமயத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது. இந்த நேரத்தில் நீங்கள் நல்ல நண்பர்களோடு பழக வேண்டும்'.

பணிவாக இருக்க வேண்டும்
'நல்லவர்களை சேர்த்து இருந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். கெட்டவர்களோடு நீங்கள் சேர்ந்தால் வாழ்க்கை வேறு மாதிரி சென்று விடும். படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் போது சிறந்த நபராகவும், திருமையானவராக இருக்க வேண்டும். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க வேண்டும்'.

பெற்றோருக்கு முக்கியத்துவம்
'மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளும் போது, வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும். உங்கள் பெற்றோருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தை செலவழிக்க வேண்டும். அதில் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும்' என கூறியுள்ளார்.
300 கோடியை தொட்ட வாரிசு.. மீண்டும் இணையும் கூட்டணி