300 கோடியை தொட்ட வாரிசு.. மீண்டும் இணையும் கூட்டணி
வாரிசு
தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் வாரிசு.
இப்படம் வெளிவந்த முதல் சில நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்க துவங்கியது.
தமிழகத்தில் வசூல் அதிகரிக்க துவங்கினாலும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பல இடங்களில் தோல்வியை தழுவியது. உதாரணத்திற்கு விஜய்யின் வசூல் கோட்டை என்று கூறப்படும் கேரளாவில் வாரிசு படம் படுதோல்வியை அடைந்தது.
நேற்று வாரிசு படம் ரூ. 300 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது என்று படக்குழு அறிவித்தனர்.
மீண்டும் அதே கூட்டணி
இந்நிலையில், நடிகர் விஜய் மீண்டும் தில் ராஜுவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தையும் வம்சி தான் இயக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.
தளபதி 68 படம் ஏற்கனவே அட்லீ இயக்க கமிட்டாகியுள்ளார் என்பதினால், தளபதி 69 படத்தை வம்சி இயக்குவார் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த புகைப்படத்தில் ரஜினியின் போஸ்டர் பக்கத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
