நயன்தாராவும், நடிகை திரிஷாவும் நண்பர்கள் இல்லை! இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்
நயன்தாரா - திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இன்றும் வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா.
இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று தான் இன்று வரை நாம் நினைத்துக்கொண்டிருக்கிறறோம்.

ஆனால், இவர்கள் இருவரும் நண்பர்களே கிடையாது என்பது போல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இந்த தகவலை நடிகை நயன்தாராவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நயன்தாரா - திரிஷா நண்பர்கள் இல்லை
அந்த பேட்டியில், நடிகை நயன்தாராவிடம் 'உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் நடிகை திரிஷா மற்றும் நடிகை ஸ்ரேயாவை பற்றி சில வார்த்தைகள் கூறுங்கள்' என்று கேள்வி கேட்டக்கப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த நயன்தாரா " நண்பர்கள் என்பது பெரிய வார்த்தை, அவர்களுக்காக அப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த முடியாது. எங்களுக்கிடையில் சில பிரச்சனைகள் உள்ளது. அதை என்னால் குறிப்பிட்டு கூற முடியவில்லை " என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டி வில்லு படத்தின் சமயத்தில் நடிகை நயன்தாரா கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.