கைநழுவிப்போன வாய்ப்பு.. நயன்தாராவுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனைகள்
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாராவிற்கு தொடர்ந்து சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இரட்டை குழந்தைகள் மூலம் ஏற்பட்ட சர்ச்சை, பின் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மூன்றாவது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பட வாய்ப்பும் தவறிப்போனது.
இப்படி நயன்தாராவிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்துகொன்டே இருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இவை அனைத்தையும் தாண்டி மற்றொரு பெரிய வாய்ப்பு நயன்தாராவின் கைநழுவிபோய்யுள்ளது. நடிகை நயன்தாரா பிரபல தயாரிப்பாளரின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதாக கமிட்டாகி இருந்தார்.
கைநழுவிப்போன வாய்ப்பு
ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முன் தொகையும் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இரண்டு படத்திற்கும் நயன்தாராவால் தற்போது கால்ஷீட் கொடுக்கமுடியாமல் தள்ளிப்போய் கொண்டே இருந்துள்ளது.
இதனால், நயன்தாராவை இப்படத்திலிருந்து விலக்கிவிட்டு, தான் கொடுத்த முன் தொகையையும் அந்த தயாரிப்பாளர் திரும்ப பெற்றுக்கொண்டாராம்.
இந்த இரண்டு படங்கள் கைநழுவிப்போனதினால் ரூ. 20 கோடி சம்பளத்தை இழந்துள்ளார் நயன். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
திருமணம் பற்றி ஓவியா எடுத்த அதிர்ச்சி முடிவு! ஏன் என் உயிரை எடுக்குறீங்க..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
