நடிகை நயன்தாரா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிரடி சோதனையில் காத்திருந்த ட்விஸ்ட்..!
நயன்தாரா
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.
கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.
தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை மறப்பதில்லை. அவ்வப்போது திரைப் பிரபலங்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
காத்திருந்த ட்விஸ்ட்
இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்துள்ளது.
அதில், நடிகை நயன்தாராவுக்கு சொந்தமான சொகுசு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி, போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வழக்கம் போல் இந்த தகவலும் பொய் என தெரியவந்துள்ளது.