'தனி ஒருவன்' ஜோடி ஜெயம் ரவி, நயன்தாரா இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி வெளிவந்தது, இதோ

By Kathick Jun 08, 2023 06:20 AM GMT
Report

இறைவன்

7 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இறைவன்". இவர் "வாமனன்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் "என்றென்றும் புன்னகை", "மனிதன்" போன்ற படங்களை இயக்கியுள்ளார். "இறைவன்" படத்தில் ஹீரோவாக ஜெயம் ரவி, ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஜெயம் ரவி - நயன்தாரா

அவர்கள் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான "தனி ஒருவன்" படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் "இறைவன்" படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி அதிக கவனம் பெற்றது.

இந்நிலையில் "இறைவன்" படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அன்று 4 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாருனு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US