திருமணத்திற்கு பின் பட வாய்ப்பை இழக்கும் நயன்தாரா.. இப்படி ஒரு நிலைமையா?
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
கடந்த ஆண்டு இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இப்படி ஒரு நிலைமையா?
இவரின் திருமணத்திற்கு பின் வெளிவந்த கனெக்ட் திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
இதையடுத்து நயன்தாரா ரவுடி பிக்சர் நிறுவனத்தின் கீழ் நடிகர் கவண் நடிக்கவிருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த கூட்டணி கைமாறி போய் உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இவர் சித்தார்த், மாதவனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக இருந்ததாம். இந்நிலையில் இப்படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக ராசி கண்ணா நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சூர்யா42 படத்தின் அப்டேட் இது தானா.. மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்