கனெக்ட் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனம்.. நயன்தாரா வெளியிட்ட அறிக்கை
நயன்தாரா
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கனெக்ட் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மாயா பட புகழ் இயக்குனர் அஸ்வின் சரவணன் உடன் நயன்தாரா மீண்டும் கூட்டணி சேர்ந்து இருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது.
எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என பலரும் கூறிய நெகட்டிவ் விமர்சனம் பற்றி தற்போது நயன்தாரா பேசி இருக்கிறார். அவர் கனெக்ட் படம் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அறிக்கை
"கனெக்ட் படத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இது genre specific படம். அதற்க்கு justice செய்ய தான் டீமாக அதிகம் உழைத்திருக்கிறோம்."
"உங்கள் feedback மற்றும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறோம். அது அடுத்தடுத்த படங்களுக்கு learning curve ஆக அமையும்" என நயன்தாரா குறிப்பிட்டு இருக்கிறார்.