இரண்டு பெரிய படங்களை கைப்பற்றிய நயன்தாரா.. இனி செம பிஸி தான்
நயன்தாரா
நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு அதன் பின் ஷாரூக்கானின் ஜவான் படத்தில் நடிக்க தொடங்கினார். அட்லீ இயக்கி வரும் அந்த படம் ஷூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதே நேரத்தில் நயன்தாராவின் இறைவன் படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
ஷாருக்கான் பதான் பட ப்ரோமோஷனில் பிசியாகி இருந்த நிலையில், அந்த படம் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விரைவில் அந்த படம் 1000 கோடி மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஷாருக் - நயன் நடிக்கும் ஜவான் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நயன்தாரா இந்த படத்தை முடித்தபிறகு அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அவர் புதிதாக இரண்டு ப்ராஜெக்ட்களில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2 புது படங்கள்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் எனவும், அதே நேரத்தில் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் பரவி வருகிறது.
ஜெயம் ரவி - நயன்தாரா நடித்த தனிஒருவன் மிகப்பெரிய ஹிட் என்பதால் அதன் இரண்டாம் பாகம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
தளபதி67 பூஜையில் பங்கேற்ற பெண் குழந்தை யார்? இந்த நடிகரின் மகள் தானா

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
