முதல் முறையாக இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையத்திற்கு வந்த நயன்தாரா.. வெளிவந்த வீடியோ
நயன்தாராவின் உயிர் உலகம்
நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு மணந்தார்.
திருமணமான 4 மாதத்திற்குள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக தான் இந்த குழந்தையை இவர்கள் பெற்றுகொண்டார்கள் என அதன்பின் தெரியவந்தது. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனால் பல பிரச்சனைகளையும் இவர்கள் சந்தித்தார்கள். அணைத்து பிரச்சனைக்கும் முடிவு கட்டிவிட்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
முதல் முறையாக வெளிவந்த வீடியோ
தங்களுடைய மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரின் முகத்தை இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் நயன்தாரா காட்டவில்லை. இந்நிலையில் முதல் முறையாக அவர்களுடைய வீடியோ வெளிவந்துள்ளது.
மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்களுடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா! உண்மை இதுதான்