ஹிந்தியில் பேசிய நயன்தாரா.. ரசிகர்கள் ஆச்சர்யம்! வைரலாகும் வீடியோ
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கும் அளவுக்கு தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. அவர் நடிப்பில் கடந்த வாரம் கனெக்ட் படம் திரைக்கு வந்தது.
கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், கனெக்ட் படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு விமர்சனங்களுக்கும் நன்றி என நேற்று நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

ஹிந்தியில் பேட்டி
இந்நிலையில் தற்போது கனெக்ட் படம் ஹிந்தியில் டப் ஆகி நேற்று (டிசம்பர் 30ம் தேதி) ரிலீஸ் ஆனது. அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் நயன்தாரா தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.
அந்த பேட்டியில் நயன்தாரா ஹிந்தியிலேயே பேசி இருக்கிறார் என்பது தான் பலருக்கும் ஆச்சர்யம் தரும் விஷயமாக அமைந்து இருக்கிறது.
தனக்கு பிடித்த ஹிந்தி படங்கள் பற்றி அவரே ஹிந்தியில் கூறி இருக்கிறார். வீடியோவில் பாருங்க..
விஜய்யின் வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா?- வெளிவந்த அப்டேட்