விஜய்யின் வாரிசு படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா?- வெளிவந்த அப்டேட்
விஜய்யின் வாரிசு
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி நிறைய ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர். இவருக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்க இப்போது வாரிசு என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ராஷ்மிகா நாயகியாக நடிக்க பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்துள்ளார். இவரை தவிர ஷ்யாம், சரத்குமார், குஷ்பு, சம்யுக்தா என ஏகப்பட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த டிசம்பர் 24ம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது, விஜய்யின் பேச்சும் செம வைரலானது.
டிரைலர் விவரம்
2023 பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வெளியாக இருக்கிறது, அதற்கான வேலைகளில் படக்குழு உள்ளனர், எங்கு பார்த்தாலும் படத்திற்கு செம புரொமோஷன் நடந்துள்ளது.
தற்போது என்ன விவரம் என்றால் இப்படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 2ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
தனது கணவருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா