நேரடியாக OTT-ல் வெளிவரும் நயன்தாரா படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
ஆனாலும் கூட இவர் மார்க்கெட்டில் உச்சத்தில் தான் இருக்கிறார். ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 12 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று டெஸ்ட். தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன், சித்தார்த் உடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார்.
OTT ரிலீஸ்
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்த நிலையில், ரிலீஸ் எப்போது என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிடவுள்ளாரகலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், O2, நெற்றிக்கண் ஆகிய படங்கள் நேரடியாக OTT-ல் இதற்கு முன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri