மீண்டும் பாலிவுட் டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. இதுவரை இணையாத ஜோடி
ஜவான்
முதல் முறையாக நடிகை நயன்தாரா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்த திரைப்படம் தான் ஜவான்.
முதல் படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் நயன்தாராவிற்கு தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அது தான் தற்போது நடந்துள்ளது. ஆம், புதிய பாலிவுட் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
புதிய பாலிவுட் படம்
சஞ்சய் லீலா பங்ஷலி இயக்கத்தில் உருவாகும் பைஜூ பவ்ரா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகனாக ரன்வீர் சிங் நடிக்கிறார். இதுவரை ரன்வீர் சிங் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கங்குபாய் கத்யவாடி.
மேலும் இவருடைய இயக்கத்தில் தேவதாஸ், பஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
